சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் எதிர்வரும் மே 01ஆம் திகதியன்று (01.05.2014) கலந்து கொண்டு நடத்தும் தொழிலாளர் தின (மே தினம்) நிகழ்வினில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் பங்கேற்று உரிமைக்குரல் கொடுக்கவுள்ளனர்.
இந்த நிகழ்வின் போது தமிழ் இனத்தின்; பிரச்சனைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், மறுக்கப்பட்டு வரும் இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கை பதற்ற சூழ்நிலையில் வைத்திருக்கும் அரசின் திட்டமிட்ட செயற்பாடு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே! போன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை தாங்கிய வண்ணம் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மற்றைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மேதின நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
காலம்.. .01.05.2014 வியாழக்கிழமை
காலை 09.00 மணிக்கு
இடம்.. சூரிச் பிரதான புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள (சீல் போஸ்டுக்கு) LAGER Strasse எனும் இடத்தில்
ஊர்வலம் ஆரம்பித்து BüRKLI Platz இல் முடிவடையும். இந்நிகழ்வில் உரிமைகளுக்காக இணைந்து குரல்தர அனைவரையும் அணிதிரளுமாறு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினராகிய நாம் அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
நன்றி. –
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், (புளொட்)
சுவிஸ் கிளை.–
தொடர்புகளுக்கு… 076.5838410 // 079.824153 // 079.6249004 // 077.9485214

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக