வியாழன், 11 நவம்பர், 2010

கொழும்பில் பெய்துவரும் கடும் மழையினால் கொழும்பு நகரின் வீதிகள் முழுவதும் வெள்ளநீர்..!

கொழும்பில் நேற்றுமாலை முதல் பெய்துவரும் கடும் மழையினால் கொழும்பு நகரின் வீதிகள் முழுவதும் வெள்ளநீர் செல்கிறது. இதனால் கொழும்பின் ஹெட்டியாவத்தை கொட்டாஞ்சேனை, வஜிரா வீதி, ஹெவலொக் வீதி, ஆயர்வேத சந்தி, பௌத்தாலோக்க மாவத்தையின் சிலபகுதிகள், மருதானை, வார்ட் பிளேஸ், மற்றும் புறநகர் பகுதிகளிலும் பல வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கொழும்பில ;கடந்த 18ஆண்டுகளின் பின்னர் முதல்தடவையாக 400 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்றுகாலை 7 மணிவரை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை இன்று மாலைவரை தொடரும் எனவும் இடி, மின்னலின் தாக்கம் காணப்படும் எனவும் பொது மக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும் வானிலை அவதானநிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக