புதன், 10 நவம்பர், 2010
ஆயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை..!
நாடுபூராவும் உள்ள இ.போ.ச. டிப்போக்களில் பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள ஆயிரம் பஸ்களை திருத்தி சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இ.போ.ச. தலைவர் எம்.டி. பந்துசேன கூறினார். முதற்கட்டமாக ஜனாதிபதியின் 2வது பதவி ஏற்பு வைபவத்தை முன்னிட்டு 250 பஸ்களை திருத்தி சேவையில் இடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கைவிடப்பட்டுள்ள பஸ்களை திருத்தி சேவையில் ஈடுபடுத்து மாறு போக்கு வரத்து அமைச்சர் குமார வெல்கம சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதன் படி சகல டிப்போக்களிலும் குறைந்தது ஒரு பஸ் வண்டியையாவது திருத்தி சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக