செவ்வாய், 16 நவம்பர், 2010

யாழ்ப்பாணம், வண்ணாப்பண்ணையில் அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் பொன்விழா சைவ மாநாடு..!

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் பொன்விழா சைவ மாநாடு நாளை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் சைவப் புலவர் மு.திருஞான சம்பந்தபிள்ளை தலைமை தாங்கவுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் கௌரவ அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். விழாவில் சைவநாதம் பொன்மலர் வெளியீடும், மலரினை யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி மா. வேதநாதன் அறிமுகம் செய்துவைப்பார். சைவப் பெரியார்களும் மாநாட்டில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக