திங்கள், 22 நவம்பர், 2010

2011ம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு..!

2011ம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுபிற்பகல் 1.35மணிக்கு வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். நீண்டகால மற்றும் குறுகியகால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே இவ் வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைவாகக் கிராமங்களை அபிவிருத்திசெய்து ஏழை, பணக்காரன் என்ற வர்க்க ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் சமமாகப் பகிரக்கூடிய வகையிலேயே இவ் வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதற்குக் காணப்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு, நலன்புரி, கல்வி மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகள் குறித்து இவ்வரவு - செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சு வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக