வெள்ளி, 12 நவம்பர், 2010
சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பினரின் வேலைத்திட்டம்..!
வென்னப்புவவிலுள்ள சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பினர் அங்கத்தவரின் தொழிலாண்மை மற்றும் செயற்றிறனை மேம்படுத்தும் பொருட்டு பல வேலைத்திட்டங்களை நாடெங்கிலும் அமுல்படுத்தவுள்ளனர். இதனடிப்படையில், நேற்றுமுதல் 2011 ஜனவரி 31ம் திகதி வரையிலுள்ள வேலைத்திட்ட விபரங்களை நிருவாகப் பணிப்பாளர் பேராசிரியர் டீ.எஸ்.ஜயந்த களுபோவில அனுப்பி வைத்துள்ளார். ஐந்தாவது மனித உரிமை அமைப்பின் 5 ஆவது விழாவிற்கு முன்னோடியாக அங்கத்தவர் மதிப்பீட்டு வேலைதிட்டம் மாகாண ரீதியில் இடம் பெறவுள்ளதுடன் சேவை மதிப்பீட்டு நேர்முகப்பரீட்சையும் இடம்பெறவுள்ளது. சேவை விருது வழங்கல்நிகழ்வு பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள லோட்டஸ் எஜ் ஹோட்டலில் அடுத்த வருடம் 2011 ஜனவரி 11ல் நடைபெறும். மனித உரிமை பயிற்சி வேலைத்திட்டத்தில் இணைந்து செயலாற்றியோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 22ம் திகதியில் நடைபெறுமென நிருவாகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை 2011ஆம் ஆண்டிற்கான அடையாள அட்டை, நாட்குறிப்பேடு மற்றும் மும்மொழி நூல்கள் என்பன டிசம்பர் 28ஆம் திகதி வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். வர்த்தகத்துறையில் தடம் பதித்த உள்நாடு, வெளிநாட்டிலுள்ள 50 பேருக்கும் சுனாமியின் போது சேவையாற்றிய 10 சமூகசேவை அமைப்பினருக்கான விருதுகளும் வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைப்பில் அரும்பணியாற்றிய 100 பேருக்கான சேவை மதிப்பீட்டு விருதும் நெஞ்சுப்பட்டி, இலச்சினை, விசேட காப்புறுதி திட்டம் என்பனவும் இதில் அடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக