சனி, 23 அக்டோபர், 2010

களுவாஞ்சிக்குடியில் கைத்தொலைபேசி, பற்றரி என்பவற்றைக் கொள்ளைவிட்டவர் கைது..!

நீண்ட நாட்களாக கையடக்கத் தொலைபேசிகளையும், அதன் பெற்றரிகளையும் கொள்ளையிட்டு வந்த ஒருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் நேற்றுக் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர். மானவடு தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமுள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளில் இவற்றை குறித்த சந்தேக நபர் கொள்ளையிட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து 39 பெற்றரிகளையும், ஒரு கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக