சனி, 23 அக்டோபர், 2010
தாழங்குடா கல்வியியல் கல்லூரி வளாகத்தினுள் கைத்தொலைபேசிக்கு தடை..!
மட்டக்களப்பு, தாழங்குடா கல்வியியல் கல்லூரி வளாகத்தினுள், ஆசிரிய பயிலுநர் மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என கல்லூரி பீடாதிபதி எம்.பாக்கிய ராசா தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த நடைமுறை கல்லூரிக்குள் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது இந்நடைமுறை கண்டிப்பாக அமுல்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக சீரழிவுகளைத் தடுக்கும் பொருட்டே இந்நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் ஆசிரிய பயிலுநர் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியை கல்லூரி வளாகத்திற்குள் பாவிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என பீடாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தமது குடும்ப உறவினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள பொது தொலைபேசியைப் பயன்படுத்தலாம் என்றும் பீடாதிபதி எம்.பாக்கியராசா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக