புதன், 20 அக்டோபர், 2010

புலிகள் அமைப்பைத் தோற்கடித்து இன்றைய சூழலை உருவாக்கித் தந்தமைக்காக ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவிப்பு..!

புலிகள் அமைப்பைத் தோற்கடித்து இன்றைய சூழலை உருவாக்கித் தந்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரம்பரியக் கைத்தொழில் சிறு கைத்தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. நன்றி தெரிவித்துள்ளார். புலிகளைத் தோற்கடித்தமைக்காக எங்கள் மண்ணில் வைத்து உங்களுக்கு இன்று நன்றி கூறுகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் வைத்தே அமைச்சர் இந்தப் பாராட்டைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நலனுக்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும் அமைச்சர் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் மற்றும் வடக்கு ஆளுநர் சந்திரசிறி ஆகியோரின் செயற்பாடுகள் பற்றி விமர்சித்தார். இருவருமாக வடக்கில் திறந்து அல்லது ஆரம்பித்த வைத்த நிகழ்ச்சிகள் பற்றிய படங்களைத் திரையில் போட்டுக்காட்டிய ஜனாதிபதி அவற்றில் பணிகள் யாவும் அரைகுறையாக நிற்பதாகச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக வயாவிளான் பாடசாலைக் கையளிப்புத் தொடர்பான படத்தைப் போட்டுக் காட்டிய அவர், கூரைகள் அற்ற கட்டங்களையும் திருத்தப்படாத பாடசாலையையும் கையளித்தா படமெடுத்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக