
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு எனது அமைச்சின் ஊடாக தேவையான உதவிகளை வழங்குவேன். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நேற்று நடைபெற்ற இஸ்லாமியக் கலை விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் தொழில்வாய்ப்பு மற்றும் உதவிகளை எனது அமைச்சின் ஊடாக செய்து கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக