ஞாயிறு, 31 அக்டோபர், 2010

நாட்டில் அனைவருமே அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்-ஐ.தே.கட்சி..!

நாட்டில் அனைவருமே அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவருமே அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1999ம் ஆண்டு நகர மண்டபத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை படுகொலை செய்வதற்காக வைக்கப்பட்ட குண்டை கொழும்பிற்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்ட நபர் இன்று ஆளும்கட்சி அமைச்சர் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளைத் தோற்கடித்து நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த படைத்தளபதி இன்று சிறையில் வாடுவதாக அவர் தெரிவித்துள்ளார். சுவரொட்டி ஒன்றை ஒட்டுவதற்குக் கூட நாட்டில் சுதந்திரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக