திங்கள், 25 அக்டோபர், 2010
நுரைச்சோலை அனல்மின் நிலைய தீவிபத்து நாசகார வேலையா, விசாரணை தொடர்கிறது..!
நேற்றுக்காலை நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து ஏதாவது நாசகார வேலையா என அறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல்மின்சார நிலையத்திற்கு பொலிஸ் மாஅதிபர் நேற்றுமாலை நேரில் விஜயம்செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளதுடன், அதிகாரிகளுடன் விசாணையையும் செய்துள்ளது. இந்த அனல் மின்நிலையம் அடுத்தமாதம் 17ம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், அனல் மின்நிலையத்தின் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் நிலையிலுள்ளது. எனினும் திட்டமிட்டபடி அடுத்தமாதம் இம்மின்நிலையம் திறந்து வைக்கப்படும் என்றும், அடுத்த ஜனவரியில் இங்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின்சாரத்துடன் இணைக்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று இந்த அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் சேத விபரங்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக