திங்கள், 25 அக்டோபர், 2010

யுத்தத்தின்போது கைவிடப்பட்ட 2050 மோட்டார் சைக்கிள்களை ஒப்படைக்க நடவடிக்கை..!

யுத்தத்தின்போது கைவிடப்பட்ட வாகனங்களில் 2050 மோட்டார் சைக்கிள்கள் பாவனைக்கு தகுதியானதென வாகன பரிசோதகர்களினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. வாகனங்களின் உரிமையாளர்கள் தமது வாகனம் தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மழைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். தனது வேண்டுகோளுக்கிணங்க மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் டி.பி.எல். தர்மபிரியவின் ஆலோசனைக்கமைய தொழில்நுட்ப உதவி ஆணையாளர் எஸ்.ஏ. பிரேமரட்னா தலைமையிலான வாகன பரிசோதகர்கள் 12 பேர் அடங்கிய குழுவினர் பரிசோத னையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். விஷேட பரிசோதனையின்போதே 2050 மோட்டார் சைக்கிள்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன. பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி, வாகனப் பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட்டை பிரதி, கிராம அலுவலகரின் உறுதிப்பத்திரம் என்பன சமர்ப்பித்து வாகன உரிமையாளர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக