சனி, 9 அக்டோபர், 2010

கொழும்பின் உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் கேந்திர நிலையங்களில் சீ.சீ.டி.வி கமராக்கள்..!

தலைநகர் கொழும்பின் உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் கேந்திர நிலையங்களில் சீ.சீ.டி.வி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும் இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை தலைமைக் காரியாலய உத்தியோகத்தர்கள் இந்த கமராக்களிலிருந்து கிடைக்கப் பெறும் காட்சிகள் கண்காணிக்கபபட உள்ளன. விசேட பயிற்சி பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்த சீ.சீ.டி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மோட்டார் போக்குவரத்து சட்டங்களை மீறும் சம்பவங்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் கட்டுப்படுத்த இந்த சீ.சீ.டி.வி. கமராக்கள் பேரூதவியாக அமையும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக