
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் எதிர்வரும் நவம்பர்மாதம் 18ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரசபையின் பணிப்பாளர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார். துறைமுகத்தைக் கடலுடன் இணைப்பதற்காக கொழும்பு - கதிர்காம பழைய வீதியின் சுற்றுப்புற பகுதிகள் தோண்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக