ஞாயிறு, 10 அக்டோபர், 2010
அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 கியூபப் பிரஜைகளுக்கு ஆதரவாக நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்..!
அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 கியூபப் பிரஜைகளுக்கு ஆதரவாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அரசியல் எதிரிகளான ஜே.வி.பி.யும் தேசிய சுதந்திர முன்னணியும் ஐக்கியத்துடன் செயற்பட்டன. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளிப்புறத்தே சுனில் கந்துநெட்டி, பிமல் ரட்ணாயக்க ஆகிய எம்.பி.க்கள் தலைமையில் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள் குழுமி நின்றனர். அதேசமயம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். மதியவேளையில் ஆரம்பமான இந்த எதிர்ப்புப் போராட்டம் சுமார் 1மணித்தியாலம் வரை நீடித்ததாக அமெரிக்கத் தூதரகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கனின் மகஜர் தூதரகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐந்து கியூப நாட்டவர்களும் 12 வருடங்களாக அமெரிக்கச் சிறைகளில் உள்ளனர். அமெரிக்காவில் நாசகார நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக