சனி, 2 அக்டோபர், 2010

மட்டக்களப்பில் 13 பாடசாலைகளுக்கு புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க யுனிசெப் நடவடிக்கை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட பின்தங்கிய பகுதிகளில் 13 பாடசாலைகளுக்கு புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குத் தேவையான நிதியை ஐரோப்பிய யூனியன் ஒதுக்கீடு செய்துள்ளதுடன், சுமார் 35 கோடி ரூபா நிதியை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்டிடங்களின் வேலைகள் நேற்று மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவின் முறுத்தானை சிறீமுருகன் வித்தியாலயத்தில் நடைபெற்றன. இந்த ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஐரோப்பிய ய+னியன் தூதுக்குழுவின் பிரதிநிதி திருமதி புளோரன்ஸ் ஹம்பாரோட்டா, கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ. அப்துல் நிஸாம்,கிணறுகள் யுனிசெப் மட்டக்களப்பு பொறுப்பதிகாரி ஹப்ரியல் ரொசைரோ உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக