சனி, 2 அக்டோபர், 2010
சார்க் நாடுகளின் 16வது சம்மேளன மாநாடு கொழும்பு சினமன் கார்ட் ஹோட்டலில் இன்று..!
சார்க் நாடுகளின் 16வது சம்மேளன மாநாடு கொழும்பு சினமன் கார்ட் ஹோட்டலில் இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஸ்திரத்தன்மை வாய்ந்த பொருளாதார ஒருங்கிணைப்பும்இபிராந்திய தனியார் வர்த்தக துறைகளின் பங்களிப்பும் என்னும் தலைபப்பில் இந்த மாநாடு இடம் பெறுகின்றது. காலை ஆரம்பமான மாநாடு மாலை 7.00 மணி வரை இடம் பெறுகின்றது.இலங்கை வர்த்தக சபைகளின் சம்மேளனம் மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தக சம்மேளனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.பிராந்தியத்தின் பொருளாதாரம்இகைத்தொழில் மற்றும் உல்லாசப் பயணத்துறையின் வளர்ச்சி வேகம் அதனது தன்மை தற்போதைய சூழலில் தெற்காசிய நாடுகளின் வர்த்தக துறைகளின் மூலோபாயங்கள் என்பன குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.மூன்று அமர்வுகளாக இடம் பெற்ற இந்த மாநாட்டின் பிரதம உரையினை வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றினார். சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் சீல் கான்த் சர்மாஇஇலங்கை வர்த்தக சம்மேளன சபைத் தலைவர் கோசல விக்ரமநாயக்கஇசார்க் வர்த்தக சம்மேளன தலைவர் அன்சுல் ஹக்இபிராந்திய பணிப்பாளர் சைக் பிரயிட் உட்பட பலரும் உரையாற்றினர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக