சனி, 30 அக்டோபர், 2010

உதுல் பிரேமரட்ணவை நவம்பர் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு..!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ணவை எதிர்வரும் நவம்பர் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகோகொடை பொலிஸாரால் சிறிகொத்தவிற்கு எதிரில் கைதுசெய்யப்பட்ட உதுல் பிரேமரட்ண கோட்டே நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். பல்கலைக்கழகங்களில் அண்மைக்காலமாக நிலவிவரும் குழப்ப நிலைமைகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நீதிமன்றப் பிடியாணை உத்தரவின் பிரகாரம் பொலிஸாரால் உதுல் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக