சனி, 30 அக்டோபர், 2010

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்பும் நாடுகளில் இலங்கை 03வது இடத்தில்..!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்பும் நாடுகளில் 2004ம் ஆண்டு இலங்கை 13வது இடத்தில் இருந்தது. இப்போது மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த இடத்திலிருந்து முதலாவது இடத்தை அடைவதே எமது இலக்கு. மோசடியற்ற விதத்தில் வேலை வாய்ப் புக்காக ஆட்களை அனுப் பும் போது, எமக்கு முதல் இட த்தை வெகுவிரைவில் எட்ட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரிய மொழி எழுத்துப் பரீட்சை எட்டாவது தடவையாகவும் நடத்தப்படும். இவ்வேளையில் சில விஷமிகள் பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கு குறுந்தகவல் அனுப்புவதாக கூறி 25,000 ரூபாமுதல் 40,000 ரூபாவரையில் சிம் கார்ட்டுகளை விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளன. இதனைத் தடுக்கவே இம்முறை 700 பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது என்றும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் கூறியுள்ளார். கொழும்பு மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.எம்.டி. ஹேரத் தலைமையில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக