செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஜனாதிபதி செயலணிக் குழு அதிகாரி மன்னார் வருகை..!!

வடமாகாண ஜனாதிபதி செயலணிக் குழுவின் முக்கிய அதிகாரி இன்று மன்னாருக்கு வருகை தந்தார். அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று காலை 9.00 மணியளவில் மன்னார் அரச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி செயலணிக் குழுவின் அதிகாரி விக்ரம ஆராச்சி, மன்னார் அரசாங்க அதிபர் ஏ. நிக்கலஸ் பிள்ளை மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், தற்போது பருவமழை ஆரம்பித்துள்ளதன் காரணமாக மீள்குடியேறிய மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் உதவிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக