ஞாயிறு, 26 செப்டம்பர், 2010
மட்டக்களப்பு சுற்றுலாத்தகவல் நிலையத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திறந்து வைத்தார்..!
மட்டக்களப்பு நகரத்தில் நெக்டப் திட்டத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மானிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தகவல் நிலையத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று காலை திறந்து வைத்தார். இதை திறந்து வைக்கும் வைபவத்தில் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் பௌசி மற்றும் கிழக்கு மகான முதலமைச்சர் சிவநெசதுறை சந்திர காந்தன் மற்றும் பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லா, விநாயக மூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாண அமைச்சர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்க மாகாண ஆளுனர் அல்மிரட் மொஹான் விஜே விக்ரம உட்பட மட்டக்களப்பு மாநகர சபை மேயர் பிரதி மேயர் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். நெக்டப் திட்டத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்டுள்ள சுற்றுலா தகவல் நிலையத்தினை திறந்து வைத்து அதன் நினைவுக்கல்லையும இதன்போது திரை நீக்கம் செய்து வைத்தனர். இதையடுத்து அமைச்சர் பசில் ராஜபக்ச மட்டக்களப்பு வாவியில் நடைபெற்ற தோனி ஓட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். பின்னர் நெக்டப் திட்டத்தின் நிதியுதவியின் மூலம் நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பாலமீன் மடுவில் அமைக்கப்பட்டுள்ள சூழல் கற்கை நிலையம் மற்றும் சுற்றுலாத்துறையினரை கவரும் உல்லாசத்தீவு என்பவற்றையும் அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக