சனி, 11 செப்டம்பர், 2010

தமிழ்க் கட்சிகள் கொழும்பில் சந்திப்பு (புகைப்படங்கள் இணைப்பு)..!

தமிழ்க் கட்சிகள் (11.09.2010) கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளன. இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் ஏ.கைலேஸ்வரராஜா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அ.இராசமாணிக்கம், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கம் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் செயலர் தி. ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் ம.க.சிவாஜிலிங்கம், புளொட் தலைவர் த. சித்தார்த்தன் ஆகியோரும் மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர விடாது, இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைத்து அவர்களை வேறிடங்களில் குடியேறும்படி நிர்ப்பந்திப்பனை நிறுத்த வேண்டுமெனவும், அவர்களை தத்தமது சொந்த இடங்களிலேயே விரைவில் குடியமர்த்த வேண்டுமென்றும் அரசைக் கோருவதெனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கடத்தப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திரு.சகாயமணி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை வலியுறுத்துவதென்றும் கூறப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வது தொடர்பாக கிழக்கு மாகாண சபையால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுகளை அரங்கம் ஆதரித்ததோடு அவற்றையே எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு முடிவாக செயற்படுத்த வேண்டுமென அரசை வலியுறுத்தவுள்ளதாகவும் தமிழ்க் கட்சிகள் இன்றைய கூட்டத்தின்போது தெரிவித்துள்ளன.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக