வியாழன், 9 செப்டம்பர், 2010

வடக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும்-இராணுவத்தளபதி..!

வடக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும். அதன் பின்னர் வடக்கின் சிவில் நிர்வாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க மற்றும் விமானப்படைத்தளபதி ரொஷான் குணத்திலக ஆகியோர் சாட்சியமளித்தனர். இச்சாட்சியத்தின்போது இராணுவத் தளபதி அங்கு மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலபகுதியில் இராணுவம் சர்வதேச உதவி அமைப்புக்களுடன் கொண்டிருந்த நிலையான தொடர்பினை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விதிவிடப் பிரதிநிதி நீல் பு{ஹனே உறுதிப்படுத்துவார்.நாட்டில் யுத்தம் நடை பெற்ற காலப் பகுதியில் இராணுவம் சர்வதேச உதவி அமைப்புகளுடன் நிலையான தொடர்பை கொண்டிருந்தது. குறிப்பாக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் நிலையான தொடர்பைப் பேணி வந்தனர். அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து இராணுவம் கொண்டிருந்த தொடர்புகளை நீல் பு{ஹனே உறுதிப்படுத்துவார். அதேவேளை, மனிதாபிமான நடவடிக்கைகளின் போது சிறந்த சர்வதேச தொடர்பை பேணியமை மிகவும் முக்கிய மானதொரு விடயமாகும். அதனை நாம் நன்றாகப் பயன்படுத்தினோம். எந்த நேரத்திலும் எவ்வகையான விடயங்களானாலும் எம்முடன் அல்லது இராணுவத்திடம் வினவினால் நாம் உரிய பதிலை வழங்கத் தயாராக உள்ளோம். குறிப்பாக இராணுவ நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அமைப்புகள் விருப்புடன் செயற்பட்டது மட்டுமன்றி எம்மை மேலும் ஊக்கப்படுத்தின என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக