புதன், 8 செப்டம்பர், 2010

விடுதலைப் புலிகளின் 200 கிலோ எடையுடைய தங்கம் முல்லைத்தீவில் மீட்கப்பட்டது– சரத் பொன்சேகா..!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் 200 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற இறுதி நான்காண்டு காலப்பகுதியில் வெள்ளமுள்ளிவய்க்கால் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது 200 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தம்மை பதவியிலிருந்து நீக்கியதன் பின்னர் மேலும் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்ட போதிலும் அவற்றுக்கு என்ன நேர்ந்ததென்பது வெளிப்படையாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குமரன் பத்மநாதனுக்கு சொந்தமான பெருந்தொகை சொத்துக்களுக்கு என்ன நேர்ந்ததென்பது இதுவரையில் வெளிப்படையாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தாமும் பாதுகாப்புச் செயலாளரும் ஒரே விதமான சிந்தனை உடையவர்கள் என குமரன் பத்மநாதன் அண்மையில் அளித்த செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளதாகவும் இது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் குமரன் பத்மநாதன் இதே கருத்தை வெளியிட்டிருந்தால் 5000 படைவீரர்களின் உயிர்களை பாதுகாத்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் போது பாரியளவிலான ஒத்துழைப்புக்களை வழங்கிய கருணா, பிள்ளையான் போன்றவர்கள் பின்தள்ளப்பட்டு குமரன் பத்நாதனுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக