வியாழன், 9 செப்டம்பர், 2010

கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி. (வீடியா இணைப்பு)..!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 47 வயதான அவர் இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம், புதுவசந்தம், ஆனந்தம், வெற்றி‌கொடிகட்டு, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நேற்று இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சுவலிப்பதாக கூறிய முரளி, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல் வைக்கப்பட்டது. புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.நடிகர் முரளி கடைசியாக நடித்த படம் பானா காத்தாடி. முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன இந்த படத்தையும் முரளியை அறிமுகப்படுத்திய சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம்தான். தான் நடித்த பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. முரளியின் இறுதிச்சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. வளசரவாக்கம் வீட்டில் இருந்து புறப்படும் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. ‌பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல்தகனம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளியின் மறைவையொட்டி இன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக