திங்கள், 27 செப்டம்பர், 2010

இலங்கையில் மேலும் 25 ஆபாச இணையத்தளங்களுக்குத் தடை..!!

இலங்கையில் ஆபாச இணையத்தளங்களைத் தடை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு, அவ்வாறு இயங்கும் 25 இணையத்தளங்களைத் தடை செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. ஆபாச தகவல்கள், காட்சிகளை வெளியிட்ட 186 இணையத்தளங்கள் நீதிமன்ற அனுமதியுடன் தடை செய்யயப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளின் ஆபாச புகைப்படங்கள், காணொளிகள் காணப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக