வியாழன், 3 ஜூன், 2010

காஸாசென்ற கப்பல்மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்..!!

பலஸ்தீனம் காஸாவை நோக்கிச்சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின்மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சம்பவத்தின்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் இலங்கையரசு தனது அனுதாபத்தினையும் வெளியிட்டுள்ளது. காஸாவுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிச்சென்ற துருக்கி நாட்டு உதவிக் கப்பல்கள்மீது கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய கொமாண்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 19பேர் பலியாகியதுடன் மேலும் பலர் படுகாயமடைந்தனர். பலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதிக்கு துருக்கி கப்பல் தலைமையில் ஆறு கப்பல்களில் உதவிப்பொருட்கள் ஏற்றிச்செல்லப்பட்டன. இந்நிலையில் அந்த கப்பல்களில் சுமார் 600 பேர் வரையில் பயணித்துள்ளனர். இந்நிலையிலேயே இஸ்ரேலின் கப்பற்படை கொமாண்டோ பிரிவினர் அக்கப்பல்கள்மீது அதிரடி தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக