சனி, 22 மே, 2010
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தொடர்பான சட்டபூர்வ முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் சட்டமா அதிபர் திணைக்களம்..!!
ஊடகவியலாளர் திஸநாயகத்திற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதால் அவர் தொடர்பான சட்டபூர்வ முன்னெடுப்புக்களை சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. அவருக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவே கருதுவதாக பாதுகாப்பு தொடர்பான ஊடகப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, திஸநாயகத்துக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளதால் அவர் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவுசெய்வது குறித்து சட்டமாஅதிபர் தேவையான உத்தியோகபூர்வ செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இதற்கு சில காலம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக