வியாழன், 13 மே, 2010

யாழ். மாநகரசபையின் மீள் விளம்பரம் திருப்திகரமாக இல்லையென நீதிமன்றம் அறிவிப்பு..!!

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் கடந்த 11ம்திகதி செவ்வாயன்று உள்ளுர்ப் பத்திரிகைகளில் யாழ்.மாநகர சபையால் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் நேற்று உள்ளுர்ப் பத்திரிகைகளில் சபையினால் மீளவெளியிடப்பட்ட விளம்பரமும் மன்றுக்குத் திருப்திகரமானதாக அமையாமையினால் மீண்டும் அதனைத் திருத்தி, சரியான முறையில் பொருத்தமான முறையில் பிரசுரம் செய்யுமாறு யாழ்.நீதிமன்றம் மாநகரசபைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருந்த குறிப்பிட்ட விளம்பரம் தொடர்பாக நேற்று முன்தினம் யாழ். மாநகரசபை அதிகாரிகளை மன்றுக்கு அழைத்த யாழ்.நீதிமன்ற நீதிவான் இந்த விளம்பரம் தொடர்பான மறுப்பு விளம்பரம் ஒன்றை நேற்றைய பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். நீதிவானின் உத்தரவுக்கமைய நேற்றைய பத்திரிகைகளில் யாழ்.மாநகர சபையினால் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரம் நீதிமன்றுக்குத் திருப்திகரமாக அமையவில்லையென யாழ்.மாநகரசபை அதிகாரிகளுக்கு நீதிவான் சுட்டிக்காட்டினார். எனவே சரியான பொருத்தமான விளம்பரத்தை மீண்டும் பத்திரிகைகளில் வெளியிடுமாறும், அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.நீதிமன்றம் மாநகரசபை உயர்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக