புதன், 19 மே, 2010
தமிழ் மக்களின் நிலைமை கவலையளிக்கிறதுஜே.வி.பி தெரிவிப்பு..!
தமிழர்களின் நிலைமை அதிர்ச்சியளிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளதாக ஜே.வி.பி.கவலை வெளியிட்டுள்ளது யுத்தம் நிறைவடைந்து 1வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது வடக்கு கிழக்கில் உள்ள தற்காலிக இடம்பெயர் முகாம்களில் தமிழ் மக்கள் தங்கியிருப்பதாகவும் இந்த நிலைமை தமிழ் மக்களை பெரிதும் ஏமாற்றமடைய செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது வன்னியில் 77000பேரும் வடக்கின் ஏனைய பிரதேசங்களில் 54000பேரும் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை என கடந்த மாதம் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியளிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் மேலும் 93000பேர் உறவினர்களுடன் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் கிழக்கு மாகாணத்தி;ல் இன்னமும் 70000பேர் மீள் குடியேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார் இந்த மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளதாகவும் மீண்டும் இயல்பு வாழ்க்கையை தொடர்வதற்க போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக