புதன், 19 மே, 2010
நகர அபிவிருத்திக்கான அதிகாரசபை தற்போது நகரஅழிப்பு முகர்வர் நிலையமாக மாறியுள்ளது..!!
நகர அபிவிருத்தி அதிகாரசபை இன்று நகர அழிப்பு முகவர் நிறுவனமாக மாறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் வீடுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார் சொகுசுதொடர்மாடி கட்டிடமொன்றை அமைப்பதற்கு தனியார் நிறுவனமொன்றக்கு அனுமதி வழங்கும்நோக்கில் மிவ்ஸ் வீதி வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 15மாடிகளைக்கொண்ட தொடர்மாடி வீட்டுத்தொகுதியொன்று குறித்த பிரதேசத்தில் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இந்த புதிய கட்டிடத்தொகுதியை அமைக்கும் முதலீட்டாளர்களுக்கு 15ஆண்டு வரிவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 1980ம் ஆண்டுகளின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் குறித்த பிரதேசமக்களுக்கு சட்டரீதியாக இந்தவீடுகளை வழங்கியிருந்ததாகவும் எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக