வியாழன், 20 மே, 2010
மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை - இந்தியா ஆலோசனை
இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை ஆலோசனை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் இலங்கை தெரிவித்துள்ளது. நக்ஸலைட் தீவிரவாதிகளுக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய துணை இராணுவக் குழுக்களுக்கு, இலங்கைப் படையினர் பயிற்சிகளை வழங்க முடியும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.நக்ஸலைட் தீவிரவாதிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதேசங்களிலிருந்து அவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் மட்டும் இலங்கை அரசாங்கம் உதவி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நக்ஸலைட் தீவிரவாதிகளைப் போன்று, பாரிய கெரில்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளைக் கடந்த வருடம் இலங்கைப் படையினர் வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக