வெள்ளி, 7 மே, 2010

நச்சு ஆயுதங்கள் பயன்படுத்தாத நாடுகளின் ஒன்றியத்தினை ஏற்படுத்த வேண்டுமென இலங்கை பரிந்துரை..!!

உலகில் நச்சு ஆயுதங்கள் பயன்படுத்தாத நாடுகளின் ஒன்றியமொன்றினை ஏற்படுத்த வேண்டுமென இலங்கை பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற நச்சு ஆயுதங்களுக்கு எதிரான மாநாட்டின்போது ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான அமைப்பை உருவாக்குவதன் மூலம் உலகில் நச்சு ஆயுதங்களை முழுமையாக இல்லாமற் செய்யலாமெனவும், இதன்மூலம் சர்வதேச சமாதானத்தை உறுதிப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக