செவ்வாய், 23 மார்ச், 2010

பொன்சேகாவின் மனைவி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம்..!!

கைதுசெய்யப்பட்டு தடுத்து க்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். நாட்டின் யுத்தத்தை வென்ற தளபதியை முட்டாள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள திருமதி அனோமா பொன்சேகா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பிவைத்துள்ளார். சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் ரைம்ஸ் பத்திரிகைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் பேட்டியொன்றை அளித்திருந்தார். அதில் தனது கணவரை முட்டாள் எனக் கூறியுள்ளமை எந்தவகையில் நியாயம் என அக்கடிதத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக