சனி, 8 மே, 2010

கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பில் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்கு உத்தரவு..!!

கடந்த ஏப்ரல் மாதம் 30ம்திகதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் 8தமிழ்கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக தெரிவிக்கும் சம்பவம் தொடர்பில் பதிலளித்த விசாரணைக்கு வருமாறு யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகம் யாழ் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் இணைப்பதிகாரி ரி.கனகராஜா யாழ்ப்பாண சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் மற்;றும் சிறைச்சாலை காவலர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இவர்களால் தாக்குதலுக்கு உள்ளான 8கைதிகளும் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 60பேர் இருந்த சிறைகூடத்தில் இருந்து இந்த 8பேரும் தப்பிச்செல்ல முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தாக்கதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து நாட்களின் பின்னரே யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் பணிப்புரையின் கீழ் இந்த 8கைதிகளும் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக