செவ்வாய், 18 மே, 2010
வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளில் இராணுவம் நேரடியாக ஈடுபடும்..!
அரசாங்கம் முன்னெடுக்கம் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்படுவர் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறுபகுதிகளில் அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் அபிவிருத்த பணிகளில் இராணுவம் ஈடுபட்டு வருகின்ற போதிலும் எதிர்காலத்தில் இராணுவத்தின் ஈடுபாடுகள் மேலும் அதிகரிக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளார் கெத்தாராம விளையாட்டு அரங்கை புனர்நிர்மாணம் செய்யும் பணி ஹம்பாந்தோட்டை திட்டத்தின் நிர்மாண நடவடிக்கைகள் மற்றும் தென்பகுதி நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதி மற்றும் நீர்பாசன திட்டங்களையும் இராணுவம் தற்போது முன்னெடுத்து வருகிறது என்றார். மேலும் தென்பகுதி நெடுஞ்சாலை திட்டத்தின் 11கிலோ மீற்றர் நீள வீதியை நிர்மாணிக்கும் பணி படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம் எனவே இதுதவிர வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தம் நடவடிக்கைகளிலும் அந்த மக்களுக்கு தேவையானவற்றை முன்னெடுக்கும் நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக