செவ்வாய், 18 மே, 2010

மேலுமொரு சட்டவிரோத படகு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் மீட்பு..!

அவுஸ்திரேலிய அஸ்மோ பவளப்பாறை பகுதியில் நேற்று 43 சட்டவிரோத குடியேறிகளுடன் சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலிய சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த படகில் உள்ளவர்களை அடையாளம் காணும் பொருட்டு படகில் உள்ளோர் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு சென்றவர்களில் இலங்கையர்களும் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் கடந்த 2009ம் வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 2873 ஆகும் எனினும் இந்த வருடத்தின் 4மாதகாலப்பகுதியினுள் 2792பேர் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக படகுகளில் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக