புதன், 19 மே, 2010
மிஹின்லங்கா நிறுவனத்தை ஸ்ரீலங்கன் ஏயார்லைன் நிறுவனத்துடன் இணைக்கவேண்டும் - ஐ.தே.கட்சி..!!
மிஹின் லங்கா நிறுவனத்தை ஸ்ரீலங்கன் நிறுவனத்துடன் இணைக்கவேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கப்பட கூடாது அல்லது அதனை ஸ்ரீலங்கன் நிறுவனத்துடன் இணைக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார் இவ்வாறு நட்டமடையும் நிறுவனங்களை மூடிவிடுவது நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு நட்டத்தை எதிர்நோக்கும் நிறுவனங்களுக்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்வதனை தவிர்த்து அந்தப் பணத்தை கல்வி சுகாதாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார் இலங்கை போன்ற சிறிய நாடொன்றில் இரண்டு விமானசேவைகளுக்கு அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் இதேவேளை மிஹின் லங்கா நிறுவனம் தற்போது ஸ்திரத்தன்மையை எட்டிவருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார் கடந்த காலங்களின் மிஹின் லங்கா நட்டமடைந்தபோதிலும் தற்போது அபிவிருத்தி பாதை நோக்கி நகர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார் மிஹின் லங்கா நிறுவனம் கடந்த ஆண்டு 933மில்லின் நட்டமடைந்திருந்தமையும் குறிப்பிடதக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக