ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

செயற்கைகால் பொருத்தும் நடாடும் சேவை மன்னாரில் ஆரம்பம்


வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக கால்களை இழந்தவர்களுக்கான செயற்கைகால் பொருத்தும் இரண்டாம்கட்ட நடமாடும் சேவை இன்று மன்னார் பொதுவைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் வேண்டுகோளின் பேரில் இதற்கென கொழும்பு நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் கடமையாற்றும் விஷேட நிபுணர் குழு ஒன்று மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு வரவுள்ளது. வன்னியில் இடம்பெற்ற வவுனியா மற்றும் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்த 200பேர் செயற்கைகால் பொருத்துவதற்காக மன்னார் பொதுவைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். முதற்கட்ட செயற்கைகால் பொருத்தும் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலனடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக