புதன், 5 மே, 2010

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை தயாரிக்க இந்தியக்குழு வருகை..!!

யாழ். காங்கேசன்துறைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதற்காக இந்தியாவின் துறைமுக அபிவிருத்தித் துறைசார் வல்லுனர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. யுத்தத்தினால் சேதமடைந்துள்ள காங்கேசன்துறைத் துறைமுகத்தை 12 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கு உதவுவதாக இந்திய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. இதனடிப்படையிலேயே இந்தியாவின் துறைமுக அபிவிருத்தித் துறையைச்சார்ந்த வல்லுனர்கள் குழுவொன்று இங்கு வந்துள்ளது. கடந்த ஞாயிறன்று கொழும்புக்கு வருகைதந்த இக்குழு ஒருவாரகாலம் இங்கு தங்கியிருந்து மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளது. காங்கேசன்துறைத் துறைமுகத்துக்குச் சென்று அங்குள்ள வசதிகள் மற்றும் அதனை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான திட்டங்கள் குறித்த மதிப்பீடுகளை இக்குழு மேற்கொள்ளவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக