வெள்ளி, 15 ஜனவரி, 2010

நாமல் ராஜபக்ஷ அவசரமாக வெளிநாடு சென்றுள்ளார்.. பணவைப்பிற்காக சென்றிருக்கலாம் என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு..!!

ஜனாதிபதி தேர்தலில் பல விஷேட பொறுப்புக்களை ஏற்றிருந்த ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதால் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார நிலையத்தின் தலைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். வெளிநாடுகளிலுள்ள சில வங்கிகளில் பணத்தை வைப்பிலிடுவதற்காகவே நாமல் ராஜபக்ஷ திடீரென வெளிநாடு சென்றிருப்பார் என சந்தேகம் ஏற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் எவ்வித வரையறையும் இன்றி தமது பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடும் வகையில் மத்தியவங்கி ஆளுனர் வழங்கியுள்ள சுதந்திரம் காரணமாக பஷில் ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் மனைவிமாரும் திடீரென வெளிநாடு சென்றது சந்தேகத்திந்குரியது எனத் தெரிவித்துள்ள அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியின் வெற்றி குறித்து நம்பிக்கை இழந்துள்ள ராஜபக்ஷவினர் கடந்த நான்கு வருடங்களாக கொள்ளையிட்ட பணத்தை இவ்வாறு திடீரென வெளிநாடு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக