வியாழன், 6 மே, 2010

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மூன்றாவது முறை ஜனாதிபதியாவது தொடர்பில் சர்ச்சை..!!

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின்படி ஒருவர் இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியில் இரு தடவைகள் மட்டுமே இருக்கலாம் எனவே இந்த கட்டுப்பாட்டை தளர்த்தும் விதமாக அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவர மஹிந்தராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைந்துள்ளன நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பொறுப்பை நீக்குவதற்கு மஹிந்த எதிர்ப்பு தெரிவிக்க எண்ணியள்ளதாகவும் எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் விதமாக அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவதற்கு பதிலாக தாம் மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடிய விதமாக அரசியலமைப்பு மாற்றங்களை மாற்றுமாறு சட்ட வல்லுனர்களிடம் அவர் கேட்டுள்ளார் ஆகவே ஏற்கனவே இருதடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அவர் மீண்டும் ஒருமுறை போட்டியிடுவதற்கு திட்டமிடுகிறார் ஆனால் நாட்டின் தலைவராக வருவதற்கு பிரியமாக உள்ள பஷில் ராஜபக்ஷவுக்கு இம்முறை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தாம் ஜனாதிபதியாக வருவதற்காக பிரச்சாரங்களை செய்யுமாறும் பஷில் ராஜபக்ஷ தனது மனைவியிடம் தெரிவித்துள்ளதாக இரகசிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக