வியாழன், 6 மே, 2010

துரோகிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ..!!

துரோகிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்படும் எவராயினும் அவரை, தேசத் துரோகி என்றே கருத வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருபவர்கள் துரோகிகளாகவே கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். துரோகிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும், அதற்காக எவரும் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்போர்ட் பல்கலைக்கழத்தின் வேந்தர் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச சமூகங்களின் சூழ்ச்சித் திட்டங்களை மீண்டும் எடுத்தியம்பும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த நிறைவு சகல சமூகங்களுக்கும் நிம்மதியையும் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதிலும், பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்பதில் இலங்கை அரசாங்கம் மிகவும் அவதானமாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் இழப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்காவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளை சொற்ப தினங்களில் இல்லாதொழித்திருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக