வெள்ளி, 7 மே, 2010

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை, அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை -

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும் நிலவ வேண்டும் என்றே புலம்பெயர் சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை வாழ் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக