விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட இராணுவத்தினரை நினைவு கொள்ளும் விதமாக வன்னயில் கிளிநொச்சி நகரத்தில் டிப்போ சந்தியில் உள்ள சந்திரன் பூங்காவில் மற்றொரு நினைவுத் தூபி பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான பூங்காவாக பல வருடங்களாக இயங்கிய சந்திரன் பூங்காவை தமீழ விடுதலைப் புலிகள் கடந்த 2007ஆம் ஆண்டில் மீள புனரமைப்புச் செய்து பல உபகரணங்களை பொருத்தியிருந்தனர். குறித்த சிறவர்களின் பூங்கா அமைந்திருந்த காணி தற்பொழுது இராணுவ நினைவுத் தூபி அமைக்கப்ட்ட நினைவு வளாகமாக மாற்றப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக