வெள்ளி, 7 மே, 2010

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி நெறி..!!

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி நெறி ஒன்று நடைபெற்றது. இன்று மன்னார் பொலிஸ் நிலையத்தில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எஸ்.எச்.ஈ. கொடித்துவக்கு தலைமையில் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி பயிற்சி நெறி தொடர்ந்து 02 மாதங்களுக்கு இடம்பெறும். பொலிஸாரின் கடமை, வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது என்பன தொடர்பாக பயிற்சி நெறி அமையும். தெரிவு செய்யப்பட்ட 45 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இந்தப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படுகிறது. ஆரம்ப நிகழ்வுகளில் பல உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக