ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கிளிநொச்சியில் சந்திப்பு..!

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று (02.10.2010) கிளிநொச்சியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. கிளிநொச்சியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் அதன் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் பி.பிரசாந்தன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலர் ப.உதயராசா, சுரேந்திரன், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மற்றும் மோகன், புளொட் சார்பில் அதன் செயலாளர் சு.சதானந்தம் ஆகியோரும் மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது வட பகுதியில் இராணுவ நிர்வாகத்தினை இல்லாதுசெய்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும், வெள்ள அபாயமுள்ள காரணத்தினால் அடுத்த பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்த வேண்டும், இந்திய அரசினால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்பதாக அவர்களுக்கு சொந்தக் காணிகளை வழங்க வேண்டும், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் தீர்வினை தீவிரப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துவதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக