சனி, 15 மே, 2010
கிளிநொச்சியில் இவ்வருட இறுதிக்குள் 5300வீடுகள் -கிளிநொச்சி அரசாங்க அதிபர்..!!
இவ்வருட இறுதிக்குள் கிளிநொச்சி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள 5300 குடும்பங்களுக்காக நிரந்தர வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். உலகவங்கி ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் இதுதொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார் 3640 வீடுகள் உலக வங்கியின் நிதியுதவியுடனும் 100வீடுகள் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி உதவியுடன் புதிதாக அமைக்கப்படவுள்ளன இதேவேளை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் 1600 வீடுகள் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார் மேற்படி வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகள் நிறைவுபெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக