
மானிப்பாய்ப் பகுதியில் நேற்றிரவு காணாமல் போன யுவதியொருவர் அருகிலுள்ள வீடொன்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் உடலெங்கும் கூரிய ஆயதங்களால் கிழிக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 19 வயதுடைய ஜெ.கலைவாணி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.இவர் உடுவில் மேற்கு மானிப்பாயைச் சேர்ந்தவர் ஆவார். உடுவில் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள தமது மற்றொரு வீட்டிற்கு காவலுக்கு வைக்கப்பட்டிருந்த நாய்க்கு உணவு வைப்பதற்காக நேற்றிரவு 7.30 மணியளவில் சென்றிருக்கின்றார். அருகருகே உள்ள வீடுகளாயிருந்தும் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் குடும்பத்தவர்கள் தேடுதல் நடத்திய வேளையில் வீடொன்றில் கை கால்கள் கட்டப்பட்டு வாய் பிளாஸ்ரரால் ஒட்டப்பட்ட நிலையில் உடலெங்கும் ஆயதங்களால் காயப்படுத்தப்பட்ட நிலையிலும் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் குற்றுயிராக போராடிக் கொண்டிருந்த அவர் மீட்கப்பட்டு தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தென்மராட்சிப் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் வைத்தியசாலைக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார். அவர் ஏ9 வீதியூடாக வன்னிப் பகுதியை நோக்கிச் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளை குறித்த வாகனத்தில் இருந்து பரந்தன் பகுதியில் தப்பிக் குதித்துள்ளார். அப்பகுதி மக்களால் மீட்கப்பட்ட இவர் இன்று மாலை சாவகச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக